பாடசாலைக் கீதம் தி/மூ/அல்-ஹம்றா மத்திய கல்லூரி – தோப்பூர்
ஆதி படைத்தவனே ஆலமெல்லாம் ஆழ்பவனே அறிவை எமக்களித்து அருள் புரிவாய் அல்லாஹ்வே (ஆதி படைத்தவனே ..........)
தோப்பூர் நகர்தன்னில் தொல்புகழ் நிலைத்தோங்கும் அறிவினை ஊட்டுகின்ற அல்-ஹம்றா கலைக்கூடம் (ஆதி படைத்தவனே ..........)
கல்விதனைக் கற்றுத்தரும் ஆசான்கள் நீர்வாழி கண்போல எமைக்காக்கும் பெற்றோரும் வாழியவே (ஆதி படைத்தவனே ..........)
நீர் வளமும் நில வளமும் நிறைந்த எம்மூரில் அல்-ஹம்றா ஈன்றெடுத்த ஆன்றோர்கள் வாழியவே (ஆதி படைத்தவனே ..........)
அறிவனை எமக்கூட்டும் ஆசான்கள் சேவையினால் ஆதியின் அருள் கொண்டு ஓங்குதே எம்கல்வி (ஆதி படைத்தவனே ..........)
இலங்கிடும் எழில் படைத்த எம் இலங்கைத் திருநாட்டில் ஒற்றுமை நிலைத்தோங்க அருள் புரிவாய் அல்லாஹ்வே (ஆதி படைத்தவனே ..........)
|